பார்க்கவ குல உடையார்கள் சோழர்களா?.

உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது, என்று கூறுபவர்கள் உணரட்டும்..
உடையார் என்பது என்றைக்கும் எங்கள் இனத்தின்  பட்டமாகும். அதே போல் தேவர் என்ற பட்டம் இருந்ததற்கு ஆதாரம் எத்தனை வேண்டும்? அது அநேகம் உடையார்களுக்கு இருந்திருக்கிறது.
 
கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு
மழவராயர் மகள். உடையார் குலம் மழவராயர் குலம் தான்.

கரிகாலனும் மலையமான் மன்னவனும்.

அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது.
கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார்.
கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார். இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான்.
இங்கு மலையமான் பகைகொண்ட வேளிர்களில் சேர்க்கப்படவில்லை. கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது. அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார்.
டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே.

சோழனின் கிளைக்குடி என்று கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே, அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும்.
சேதிராயர் என்பதை மட்டுமே சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க சோழரின் சொந்தமென உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு ராஜராஜனுக்கும் முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.
இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி.
உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு. ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.
முள்ளூர் அரசனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் தனது கோட்டை வாயிலில் புலியின் சின்னத்தைப் பதித்திருந்தான் என புறநானூற்றில் 174 வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிக் கொடி யாருடையது? அதை மலையமான் வைத்திருந்தான் என்றால் என்ன அர்த்தம் இருவரும் ஒரே குலம் என்று தானே தெளிவாகிறது.

உடையார் பட்டம் உள்ளோர் எல்லாம் உடையார் அல்ல.

ஆதியிலிருந்தே பார்க்கவ குலம் பெருமை வாய்ந்த சமூகமாக இருந்துள்ளதால் இந்த உடையார்,நயினார்,மூப்பனார் என்ற பட்டங்களை பிற சமூகங்களும் குலப்பெருமை வேண்டி,குறிப்பாக வன்னியர்கள், பிள்ளைமார்,முதலிமார் போன்ற வேளாளர்கள்,குயவர்கள்,முத்துராஜாக்கள்,கவுண்டர்கள் போன்றோர் சூட்டிக்கொண்டு அவரவர் ஜாதிப் பழக்கங்களையே கையாண்டுள்ளனர் .என்றொரு குறிப்பும் கிடைக்கிறது.

உடையார் என்ற பட்டம் வேளிர் வம்சத்தையே நேரடியாக சுட்டும். ஆதாரப்பூர்வமாக குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருடமாக சுத்தத் தமிழ் ஜாதி உடையான்கள் பார்க்கவ குலம் மட்டுமே.
சோழர்களோடு தொடர்புடைய மிக நெருங்கிய ஆதாரங்கள் எங்களிடம் இன்னும் கூட நிறையவே உண்டு.
மேலும் ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி எங்கள் பார்க்கவ வம்சத்து மலையமானின் மகள் என்பது நிரூபணமான வரலாற்று ஆதாரங்கள் கொண்டது.
எங்கள் ரத்தமான உடையார் ராஜராஜனின் வீரத்தை ஒத்த, பெருமையை நிகர்த்த இந்திய அரசர்கள் அவனுக்கு முன்னரும், பின்னரும் யாருமில்லை என்ற பெருமை போதும்.
ராஜராஜனைப் பெற்றெடுத்த தாய் வம்சமும் நாங்கள் தான் என்ற பெருமையே போதும்.
மேலும் சோழர்கள் வாழ்ந்த, ஆண்ட பகுதியில் பெரும்பான்மையினர் உடையார்களே என்பதும் அங்குள்ள நிலங்களின் பெரும்பான்மை உரிமையாளர்கள் பிரபுக்கள் போன்றவர்களும் எப்போதும் உடையார்களே தான். டெல்டா பகுதியில் இருந்து பெருமளவு உடையார்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சூழ்நிலையில் அங்கிருந்து வெளியேறியும் இன்றைக்கும் உடையார்களே அங்கு பெரும்பான்மை.
  சோழர்கள் (நத்தமான்) உடையார்கள் தான் என்பதற்கு ஆதாரங்கள் இப்போது மறைக்கப்பட்டு இருக்கின்றன.  அவை விரைவில் வெளிப்படுத்தப்படும்.

சாளுக்ய அரசன் சத்யாசிரயனுடைய பட்டத்து யானையைக் கொன்ற சத்திரியன் சுருதிமான் நக்கன் சந்திரன்.

கிபி 1015 ம் வருடம் முதலாம் ராஜேந்திர சோழனுடைய யானைப்படைத் தளபதியாக திகழ்ந்த மாவீரன் சத்ரிய குல சிங்கம் சுருதிமான் நக்கன் சந்திரன் கடக்கம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பட்டத்து யானையைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்தான். இத் தளபதியின் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்ததாக கல்வெட்டு காணப்படுகிறது.

சுருதிமான்கள் அனைவருமே சிறந்த போர்வீரர்களாக அதிலும் தளபதியாக திகழ்ந்திருக்கின்றனர்.
சுருதிமானின் சில பட்டங்கள் மட்டும்
உடையான் ,அரையன்,பேரரையன், விழுப்பரையன், வானராயர், இருங்கோளன், சுருதிமான் மறவன் கண்டன்(சுத்த வீரன்), நிஷாத ராஜன், படைமுதலி, தெரிந்த வில்லிகள், சுருதிமான் வன்னிய நாயன், நாயன். ராஜமல்லன்,முத்தரையன், சுருதிமான் ஊரன் நம்பி(கத்திக்காரன்), மழவன், சுருதிமான் நாட்டார், நாடாள்வான் என்று இது போன்று இன்னும் அநேகம் பட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் பட்டங்களே இது போருக்கு சென்றவர் யாருக்கும் கிடைக்கலாம்.
ஆனால் இதில் அரசகுலவன் (பார்க்கவ குலம்,யது குலம்)என்று காணப்படுகிறதே இது தான் சத்திரியன் என்ற இனத்தைக் குறிப்பது. போருக்கு எல்லோரும் சென்றிருப்பதாக கூறுவார்கள். ஆனால் அவர் அனைவருக்கும் இம்மாதிரி அரசகுலத்தவர்(சத்திரியன்) என்று கல்வெட்டு காணப்படாது உறுதியாக. இது அரச வம்சத்தவர்க்கு மட்டுமே உரியது.

கிபி 1218 ம் வருடத்திய கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியில் வேத காலத்தில் காஷ்யப ரிஷி இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக செய்த வேள்வியின் போது அந்த அக்னியில் இருந்து சுருதிமான்களைப் படைத்தார் என்று புராணக் கதை ஒன்று காணப்படுகிறது. நம் குல முதல்வன் தெய்வீக ராஜனே இவ்விதம் பார்க்கவ முனிவரின் யாகத்தில் தோன்றியவர் தானே.

மேலும் முக்கியமாக பார்க்கவ குலத்தவன் என்றும் யது குலம் என்றும் அரசகுலத்தவன் என்றும் உடையான் என்றும் மலையமான் நத்தமான் சுருதிமான் ஆகிய இம் மூவருக்குமே பொது ஒற்றுமை கொண்ட கல்வெட்டுகள் செப்பேடு ஆதாரங்கள் காணப்படுகிறது. ஆகவே தான் நாம் பார்க்கவ குல உடையார்கள் வேற்றுமைக்கு நமக்குள் வழியே இல்லை. வீரத்திற்கும் பாரம்பரியப்பெருமைக்கும் பண்பிற்கும் நமக்கு குறை ஒன்றுமில்லை.

பார்க்கவ குல உடையார் சரராமன் சடையன் சேதிராயன் என்ற சடையப்ப வள்ளல் .

சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்.   ...................................................................................................................................................................
உடையார் குலத்தில் பலவகையும்
உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
வளம்சேர் சோழ மண்டலமே 30
உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்

என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
.................................................................................................................
வள்ளல் குலத்தோராக கம்பன் கூறும் இனத்தவர்கள்:

உடையார் குலத்தில் பலவகையும் அதாவது உடையார் என்றாலே பார்க்கவ குலம்(நத்தமான்) என்றே பொருள் கூறுகிறார் ஆசிரியர்.

சுருதிமானும் மலையமானும் இதே பார்க்கவ குலத்தையே சார்ந்தவர்கள் என்றும் இதையே உடையார் குலத்தில் பலவகையும் என்று அழகாக தெளிவுபடுத்துகிறார் உரையாசிரியர். நத்தமான்,மலையமான்,சுருதிமான் மூவருக்கும் பார்க்கவ கோத்திரம் என்ற கல்வெட்டு,செப்பேடு ஆதாரம் இருப்பதும் இதையே தெளிவாக உறுதி செய்கிறது.

செல்வந்தராய் இருந்து வாரி வழங்கும் வள்ளல் குலத்தினர் என்று கம்பர் கூறும் குலங்களாவது நம் பார்க்கவ குல உடையார் குலம் ஒன்றும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உயர் வேளாளர் அதாவது உழுதுண்ணும் வெள்ளாளர் அல்லாது உழுவித்துண்ணும் உயர் குடி வேளாளர் இனத்தவரையும் (சோழிய வேளாளர்),
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குடையார் குலத்தில் பலவகையும் இவர்கள் திரைகடலோடி திரவியம் தேடிய வணிக குலத்தவர் ஆகிய பண்பிற் சிறந்த சிவ நேசச் செல்வர்கள் ஆகிய நகரத்தார் என்ற செட்டியார் இனத்தவர்களையும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கோனார் குலத்தில் பலவகையும், அதாவது ஆநிரைச் செல்வங்கள் அநேகம் கொண்ட செல்வக் குடியினரான கோனார் குலத்தில் உள்ளவர்களையும் கூறுகிறார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆக இந்த உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகியோர் குபேரனைப் போல செல்வம் கொண்டவர்கள் என்றும் இவர்களில் பலர் வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துள்ளார்கள் சோழ தேசத்தில் என்கிறார்.

சடையப்ப வள்ளல் இவர்களில் நம் பார்க்கவ குல உடையார்
இனத்தவர் ஆகவே அவரை உடையான் சரராமன் என்று கம்பர் கூறுகிறார்.

மேலும்
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூறவிணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனுமணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே சோழமண்டல சதகம்

நம் உடையார் இனத்தில் பிற்கால மலையமான்கள் சேதிராயர் பட்டம் கொண்டு ஆண்டுள்ளனர். அதையே இங்கு உடையான் சடையப்ப வள்ளலுக்கு உள்ள சேதிராயன் பட்டம் உறுதி செய்கிறது. ஆக என்றைக்கும் சிறந்த புகழ் வாய்ந்த வள்ளல் குலமும் வேளிர் குலமும் உடையார் குலமாகிய நம் பார்க்கவ குலமே ஆகும்.
எளியோர்க்கு ஈவதே எம் பிறவிக் கடன் எனக் கொள்ளுங்கள் வள்ளல் குலமாகிய பார்க்கவ குலத்தோரே. அதுவே நம் குல தர்மம் ஆகும்.

எவன் இந்த உடையானின் உடைவாள்?

உடையானின் உடைவாள் என்ற பெயரில் கள்ளர் மறவரைப் பற்றி தாறுமாறாக ஒரு நபர் எழுதி வருகிறார்.

அவர் நமது உடையார் இனத்தவர் கிடையாது வேற்று இனத்தவர் என்பது விசாரித்து அறிந்த வகையில் நிச்சயமான உண்மை.

ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் உடையாருக்கும் முக்குலத்தோருக்கும் இடையே பகை உண்டாக்க வேண்டும் என்ற தீய நோக்கம் ஒன்றே குறிக்கோள் என்பதை உணர்ந்து கொண்டோம்.

இது விஷயங்கள் சகோதரர் முக்குலத்துப் புலி வரலாற்று ஆசிரியர்  அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
நண்பர்களே சகோதரர்களே நம் இரு இனத்திற்குள்ளும் உள்ள நட்பும் நேசமும் வரலாற்று ரீதியான தொடர்பு உடையது ஆக எந்த ஒரு காரணத்திற்காகவும் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்.
(அரசியல் சார்பால் உள்ள கருத்து வேறுபாடு எல்லா இனத்திற்குள்ளும் அதன் உட்பிரிவுகளுக்குள்ளும் எப்போதும் உள்ளது. அது இங்கு சம்பந்தமில்லாத ஒன்று)

ஆகவே முக்குலத்து சொந்தங்கள் மற்றும் பார்க்கவ குல சொந்தங்கள் ஆகியோர் இதை நம் இருவரையுமே பொது எதிரியாக கருதும் கொடிய எதிரியின் செயல் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் நமக்குள் மனக்கசப்பை உண்டாக்கும் தேவையற்ற வீண் வாக்கு வாதங்கள் கருத்து மாறுபாடுகள் வேண்டாம் என்று  கேட்டுக் கொள்கிறோம்.


சேதுபதி மன்னரும் சின்ன மருதுவும்

சேதுபதி மன்னரும் சின்ன மருதுவும் நம் உடையார் சமூகத்தின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள். சுல்தானால் உடையார்பாளையம் பகுதிகள் சூறையாடப்பட்டு உடையார்கள் அதனை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் அன்போடு வரவேற்று அன்றைய சேதுபதி மன்னரும், மாவீரன் சின்னமருதுவும் அவர்கள் ஆண்ட பகுதிகளில் இடங்களைக் கொடுத்து அரவணைத்துக் கொண்டனர்.
பொதுவாக மறவர்கள் சொல்வார்கள் தெற்கே மறவர் என்றால் வடக்கே உடையார் தான்யா நம்ம மாதிரி ஜாதி என்று.. உடையார் பட்டம் சேதுபதிக்கு உண்டு.

மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.

மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும்.

மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமையாளர் என்பது பொருளாகும்.

மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்:

பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்(வெள்ளாளர்))

பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்)

வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்)

நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர்,பனைத் தொழில்)

சேனைக் குடையர் மூப்பர்=(வெள்ளாளர்,இலை வாணியர்))

.................................................................................................................................................................

மூப்பனார் பட்டம் கொண்டோர்:

முதிராஜு,முத்தரையர்(மூப்பனார்)=(போர்க்குடியினர்)

 சாலியர்(மூப்பனார்)=(நெசவாளர்கள்)

வன்னியர்(மூப்பனார்)=(போர்க்குடியினர்)

பார்கவ குல சுருதிமான்(மூப்பனார்)=(போர்க்குடியினர்)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.
Noboru karashima examined seven inscriptions from uttathur which belongsto the periods of the RAJARAJA 3rd.
These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and BUYING) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli vanniya oragambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

மேலும் மலைஜாதியினர்,வேட்டுவர் என சில பழங்குடிகளிலும் மூப்பர் என்ற பட்டம் உள்ளவர்களுண்டு.
இன்னும் அநேக பழமையான தமிழ் ஜாதிகளில் காணப்படும் பட்டங்களில் இதுவும் ஒன்று.
 அந்தந்த இனக்குழுக்களின் தலைமையாக செயல்பட்டோருக்கு மூப்பர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
குல உயர்வு கருதி ஆர் விகுதி கொண்டு அழைக்கப்படுதல்,
மூப்பன்+ஆர்=மூப்பனார்.

மேற்கண்ட இனக்குழுக்கள் மூப்பர்,மூப்பனார் என்று பட்டத்தால் ஒன்று போல் காணப்பட்டாலும் ஒருவருக்கு ஒருவர் துளியும் இன சம்பந்தம் கிடையாது. அனைவரும் வெவ்வேறு இனக்குழுக்களே.

மலையமான் தெய்வீகராஜன் வரலாறு பற்றிய செப்பேடுகளும் இலக்கிய ஆதாரமும்

சங்க காலத்தில் மலையமாநாடு ஆண்ட தெய்வீகராஜன் ஆட்சி பற்றிய  குறிப்புகள் ஔவையாரின் பாடல்கள் வழியாகவும் செப்பு பட்டயங்கள் மூலமும் தெளிவாகவே காணக்கிடைக்கின்றன.

இவற்றின் மூலம் தெய்வீகராஜனது வீர வரலாறு, ஆளுமை, ஈகைத்திறன்,மணஉறவு ஆகியன பற்றியும் அறிய முடிகின்றது.
சிதம்பரத்தில் திருப்பாற்கடல்,நந்தவனமடம்,சதுர்முடி விநாயகர் கோவில் ஆகியவற்றைக் கட்டி தர்மங்களுக்கு வேண்டிய வழிமுறைகளையும் ஏற்படுத்தி மடத்தை நடத்தி வருமாறு சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த பட்டயத்தின் மூலம் தெய்வீகனின் வீரம்,வெற்றி,பிறப்பு,வளர்ப்பு ஆகியவற்றை அறிய முடிகிறது.
தெய்வீகன் அளித்த பட்டயத்தில் சிதம்பரம் நடராஜர் பற்றிய வர்ணனைகளும்,மடம் கட்ட வேண்டி கொடுத்த கொடைகள் பற்றிய விசயங்களும் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
மேலும் தெய்வீகராஜன் மூவேந்தர்களுடன் போரிட்டு வெற்றி கொண்டதையும்,மூவேந்தர்களின் மகள்களை மணந்ததையும் மட்டுமின்றி அவருடைய இயல்மணத்தை பற்றியும் செப்பேடு கூறுகிறது.
பாரி மகளிரை திருமணம் செய்த காலத்தில் திருமணம் நடந்த இடத்திற்கு மணம்பூண்டி என்று பெயர் உண்டானதையும்,பந்தல் அமைந்த இடத்திற்கு திருப்பாலைப் பந்தல் என்று பெயர் உண்டானதையும் பூமாரி பெய்த இடத்திற்கு பூமாரி என்றும் தண்ணீர் வந்த இடத்திற்கு குடமுருட்டி என்றும் காரணப்பெயர்களை அறிய முடிகிறது.
அவ்வையின் பாடலும் திருமண சம்பந்தமான இவ்விஷயங்களை தெளிவாக விளக்குவதாக அமைகின்றது.
தெய்வீகன் ஆட்சி செய்த பகுதிகள் மங்களூர் சீமை,திருக்கோவிலூர் சீமை,கள்ளக்குறிச்சி சீமை,சேலம் சீமை,மாமண்டூர் சீமை, தஞ்சை,சேரநாடு,சோழ மண்டலம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

தெய்வீக ராஜனின் மனைவியான சோழர் குல அரசி தன் மாங்கல்யம் நிலைக்க வேண்டி 108 காணி 32 குறிச்சிகளைத் தர்மமாக அளித்ததைப் பற்றி வேறொரு செய்தி தெரிவிக்கிறது.
தெய்வீகன் பிரம்மகத்தி தோஷத்தை நீக்குவதற்காக தேவாலயம், பிரம்மாலயம் ஆகியவற்றிற்கு செய்த தர்மம் பற்றி ஒரு குறிப்பு கிடைக்கின்றது.
 திருப்பாலை மடம் என்று அழைக்கப்படும் மடத்தை சொக்கலிங்க தம்பிரான் என்பவரின் வழிவந்தவர்கள் தற்போது நிர்வாகம் செய்து வருகின்றனர்.
பட்டய சாசன ஆதாரங்களின் படி தெய்வீகனின் வாரிசுகளான பார்க்கவ குலத்தார் மடத்தை கைக்கொண்டு தர்மகாரியங்கள் செய்ய வேண்டிய கடமையுள்ளது.

சிதம்பரம் கோவிலின் வடக்குப் பகுதியில் வடக்கு கோபுர வீதியில் 500குழி நிலமும் பொன்50 மன்னன் கொடுத்திருக்கின்றான். மேலும் 108காணியும்,நாடும்,32 குறிச்சியும் தர்ம சேவைக்காக தானம் கொடுத்துள்ளான். என்பதையும் பட்டயத்தின் மூலம் அறிகின்றோம்.
சிவஞான குரு என்பவர் வைத்திருந்த செப்புப்பட்டயத்தின் காலம் கி.பி.1234 என்று கூறப்படுகின்றது. இதன் மூலம் தெய்வீக ராஜனின் வம்சாவழி வந்த மலையமான் மன்னர்கள் தெய்வீகமன்னனின் பெயரால் இந்த தர்மங்களை தொடங்கியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. பட்டயத்தில் குதிரை மீது அமர்ந்துள்ள தெய்வீக மன்னனின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
திருக்கைவேலூர் பெயர்க்காரணம் பற்றிய குறிப்பும் உள்ளது.

இந்த பட்டயத்தில் காணப்பட்ட தெய்வீக ராஜனது வரலாற்றுக் குறிப்புகள் போன்றே, பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேட்டிலும் தெய்வீக ராஜனின் வரலாறு காணக்கிடைக்கின்றது. தெய்வீக ராஜனின் பார்க்கவ குல சந்ததியினர் பற்றிய குறிப்பும் அவர்களால் கொடுக்கப்பட்ட கொடையும் கூட இவற்றில் காணப்படுகிறது.

மலையமானின் வம்சத்தோர் தமது பார்க்கவ குல முதல்வரான தெய்வீக மன்னனின் திருப்பெயரிலேயே அநேகமான நற்காரியங்களை செய்துள்ளனர்.
அங்கவை சங்கவையை மலையமானாகிய தெய்வீகன் திருமணம் செய்தது பற்றிய கல்வெட்டுகள் ஆதாரமாக காணப்பட்டாலும் இலக்கிய ஆதாரமாக திருமணத்தைப் பற்றி ஔவையார் பாடிய பாடல்களும் ஆதாரமாக உண்டு.

ஔவையார் அங்கவை சங்கவை தெய்வீகன் திருமணம் பற்றிப் பாடிய  பாடல்கள்
ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்
கரியுரிவைக் கங்காளன் காளாப் – பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து. 23
ஆனைமுகா! உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டுள்ளாய் என்பர். அங்கவை சங்கவை கண்ணாலத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்.
அடுத்துவரும் பாடல்களை ஔவை சொல்ல ஆனைமுகன் ஒழுதினான் என்பர். 22
சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோலால்
ஊரளவும் தான்வருக உட்காதே – பாரிமகள்
அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான்
சங்கவை யுங்கூடத் தான். 24
பாரிமகள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் மணந்துகொள்ள அரசன் (மலையன்) இசைந்துள்ளான். சேர மன்னா! கூச்சப்படாமல் திருமணத்துக்கு வருக.

புகார்மன்னன் பொன்னிப் புனல்நாடன் சோழன்
தமாதென்று தானங் கிருந்து – நகாதே
கடிதின் வருக கடிக்கோவ லூர்க்கு
விடியப் பதினெட்டாம் நாள். 25
இன்று விடியப் பதினெட்டாம் நாள் கோவலூரில் திருமணம். சோழ மன்ன! ஏளனம் செய்யாமல், நீ நடத்திவைக்கும் திருமணம் என்று எண்ணி உடனே வருக.

வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன்
செய்யத் தகாதென்று தேம்பாதே – தையலர்க்கு
வேண்டுவன கொண்டு விடியவீ ரொன்பானாள்
ஈண்டு வருக இசைந்து. 26
இன்று விடியப் பதினட்டாம் நாள் திருமணம். தென்னவனே! தகுதிக்குத் தகாது என்று எண்ணாமல் சீர்வரிசையுடன் திருமணத்துக்கு வருக.

கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும்
வருணனே மாமலையன் கோவல் – திருமணத்து
முன்மாரி பெய்யும் முதுவாரி யைமாற்றிப்
பொன்மாரி யாகப் பொழி. 27
மழைத்தெய்வமே! மலையன் திருக்கோவலூரில் உன் மழை பொன்மாரியாக இருக்க வேண்டும்.
முத்தெறியும் பெண்ணை முதிர்நீர் அதுதவிர்த்து
தத்திய நெய்ப்பால் தனைப்பெய்து – குத்திச்
செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு
வருமளவும் கொண்டோடி வா 28
திருக்கோவலூர் தெய்வீகனுக்கும் பாரிமகளிர் அங்கவை சங்கவைக்கும் திருமணம் நடக்கிறது. தென்னைமரமே! நீ இளநீர் தருவதை விட்டுவிட்டுத் திருமணத்திற்கு நெய்யும் பாலும் கொண்டுவா.

பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி யாடையாம்
அந்நாள் வயலரிசி ஆகுமூர் – எந்நாளும்
தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில்
ஓங்கும் திருக்கோவ லூர். 29
சேதிமா நாட்டின் ஊர் திருக்கோவலூர். அங்கு பொன்மாரி பெய்யும். பருத்தியும் நெல்லும் செழிக்கும்.

சொல்லாம லேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில்
பலாமாவைப் பாதிரியைப் பார். 30
சொல்லாமல் உதவி செய்பவர்கள் பூக்காலே காய்க்கும் பலாமரம் போன்றவர்கள். சொல்லிவிட்டு உதவி செய்பவர்கள் பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். உதவுவதாகச் சொல்லிவிட்டுச் செய்யாதவர்கள் பூத்துவிட்டுக் காய்க்காத பாதிரிமரம் போன்றவர்கள்.

ஆயன் பதியில் ஆன்பதிவந் துற்றளகம்
மாயனூ துங்கருவி யால்நாளும் – தூயமணிக்
குன்றுபோல் வீறு குவிமுலையாள் தன்னுடன்நீ
இன்றுபோல் என்றும் இரு. 32
திருமண வாழ்த்து. பசுக்களுக்குக் காளைபோல் அமைந்துள்ள மணவாழ்க்கை மாயன் ஊதும் குழலோசை போல் இனிப்பதாய், இன்று போல் என்றென்றும் இருக்கட்டும்.

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னை
சுரப்பாடி யான்கேட்கப் பொன்னாடொன் றீந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவர் தன்கொடையின் சீர். 33
நான் ஒரு சுரம்(பா) பாடினேன். தலையில் முடி சூடிய சேரமான் பொன் விளையும் நாடு ஒன்றைப் பரிசிலாகத் தந்தான். இரப்பவர் எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வர். எனினும் கொடுப்பவர் தம் தகுதி அறிந்து நல்குவர்.

மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டு ஆதாரம்.

மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........

திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

"'மிலாடான 
ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப்
பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச்
சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார் 
ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப்
பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து 
மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்கவர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ 
விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங்
கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள் 
எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு
வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி 
முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட 
மிலாடுடையார் நரசிங்க வர்மர்.
சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு 
இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த 
சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."

திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு... 
பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார், 
நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர்
கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன்என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது.
அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது.
அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.
சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில் 
பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில்
பார்க்கவ கோத்திரத்து யாதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான். 
என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது.

பார்க்கவ குல மூப்பனார் என்னும் சுருதிமான்களின் கல்வெட்டுகளும் வரலாறும்.

அரியலூர் மாவட்டம்-பெரம்பலூரில் கி.பி 1226 இல் எழுதியுள்ள சுருதிமான் பற்றிய கல்வெட்டு செய்தி.

அரியலூர் மாவட்டம்,பெரம்பலூர் வட்டம்,கொளக்காநத்தம் ஊரில் குமரவேல் ஆசிரியர் வீட்டுப் படிக்கல் காலம் - கி.பி. 1226 மூன்றாம் இராஜராஜன்-ஆட்சியாண்டு.10 காலத்தையக் கல்வெட்டு
..ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜதேவற்கு யாண்டு10வது இத் தாம்பு செய்வித்தான் ஊற்றதூருடையான் சுருதிமான் சனனாதர் அரைய தேவநான வாண விச்சாதிர நாடாழ்வான்.

சுருதிமான் என்பது மலையமானின் வம்சம்.
ஊட்டத்தூர் என்பது திருச்சிக்கு அருகில் உள்ளது. சுருதிமான்கள் ஆதியிலிருந்தே தஞ்சையிலிருந்து..திருச்சி வரைக்கும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைக்கும் இவ்விடங்களில் சுருதிமான்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தும் வருகின்றனர். தமிழக ஜாதிப்பட்டியலில் பார்க்கவ குலத்தைத் தவிர எவருக்கும் சுருதிமான் மலையமான் நத்தமான் பட்டங்களும் கிடையாது.

மூப்பனார் என்ற பட்டம் கொண்டோரெல்லாம் சுருதிமான்களும் அல்ல.
மேலே காணும் கல்வெட்டு பட்டவர்த்தனமாக சுருதிமான் என்ற  இனப்பெயரையே கொண்டுள்ளது.
பார்க்கவ குல மூப்பனார்கள் ஆகிய சுருதிமான்கள் வேளிரில் இருங்கோவேள் குலத்தவர்கள். 

நாடாழ்வான் =நாடு + ஆழ் + வ் + ஆன்
நாடாழ்வான் அரசன் என்ற பொருளில் கூறப்படும் பட்டம்..
இது எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிட்டுக் கூறும் பட்டம் அல்ல.


அரையன்=அரசன் என்று பொருளாகும்.

யானைப்படைத்தளபதி  சுருதிமான் நக்கன் சந்திரன்:

 கி.பி.1007ல் சோழன் முதலாம் ராஜேந்திரனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரிவபதுங்க சத்தியராய் என்பவனுக்கும் நடந்த போரில் ராஜேந்திர சோழரின் யானைப் படையை தலைமை ஏற்று நடத்தியவன்
சுருதிமான் நக்கன் சந்திரன் ஆவான்.இந்த படைத்தலைவன் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்தார். என்ற  குறிப்பு காணப்படுகிறது.ஆதாரம் (S.R.Balasubramaniam Middle Chola temple page 257)
சுருதிமான்கள் போர்ப்படைத் தளபதியாக,அதிகாரிகளாக,குறுநில மன்னர்களாக,இருந்தமைக்கு அநேக சான்றுகள் உண்டு.இவர்களே
கத்திக்காரர்கள்,சவளக்காரர்கள் போன்ற சேதியர் என்னும் போர் மறவர்களாகவும் இருந்தவர்கள்.

காந்தளூர்ச் சாலை படையெடுப்பும்  சுருதிமான்களும்.

 உடையார் ராஜராஜ சோழரின் நான்காம் ஆட்சியாண்டில் கி.பி.988ம் வருடம் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான காந்தளூர்ச்சாலை என்னும் இடத்தின் மீது படையெடுத்து அழித்துள்ளார் என அவரது மெய்க்கீர்த்தி மூலம் அறிய முடிகிறது.இதற்கு காரணமாக கூறப்படும் வரலாறு......
திருவிதாங்கூர் அரசை அப்போது பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர மன்னன் ஆண்டு வந்துள்ளான்.
உடையார் ராஜராஜனின் தூதாக சென்ற தூதுவனை பாஸ்கர ரவிவர்மன்  உதயகிரிக்கோட்டையில் உள்ள சிறையிலும் அடைத்து விடுகின்றான்.
இதனால் கடுங்கோபம் கொண்ட உடையார் ராஜராஜன் தனது பகைவரான சேரர்களின் பலம் வாய்ந்த துறைமுகமாகவும்,போர்ப்பயிற்சிகள் அளிக்கும் வலிய சாலையாகவும்,கடற்படையின் மூலத்தளமாகவும் விளங்கும் காந்தளூர்ச்சாலையை அழித்து சேரனின் கொட்டம் அடக்கவும் முடிவெடுத்து தனது கடற்படையை குமரி வழியாக அனுப்பிவிட்டு பெரும் படையுடன் பாண்டிய நாடு வழியாக சென்றார்.
அப்போது சேரனின் நண்பரான பாண்டியன் அமரபுஜங்கன் சோழனை எதிர்க்க அவரையும் புறமுதுகிட்டு ஓடச்செய்த சோழன் ராஜராஜன் கடற்கரைப்பட்டினமான காந்தளூர்ச்சாலையை அழித்து நிர்மூலமாக்கி  அங்கு வலியசாலையில் அளிக்கப்பட்ட போர்ப்பயிற்சிகள்,கடற்படை செயல் பாட்டுத்தளங்கள்,தாந்த்ரீக வழிபாடுகள் இவற்றை அழித்து தடை செய்து,  மீண்டும் அச்செயல்பாடுகள் தலை தூக்காதவாறு தனது நம்பிக்கைக்கு உரிய தளபதிகளையும் படை வீரர்களையும் அங்கேயே குடியேற்றியுள்ளார்.
இதனையே களம் அழித்து.... அருளி என்ற சொற்றொடர் குறிக்கிறது......
அவ்வாறு நடைபெற்ற போருக்கு ராஜராஜனுடன் சென்ற பார்க்கவ குல சேதியர்களான சுருதிமான்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்),சவளக்காரர்கள் போன்ற படைவீரர்கள் அங்கு மீண்டும் அச்செயல்கள் தலை தூக்காத படி  கண்காணிக்க வேண்டி குடியேற்றப்பட்டனர்.
அவர்களில் சவளக்காரர் சிலர் பின்னாளில் பரதவர் போன்ற இனக்குழுக்களோடு கலந்து தனியே வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு அன்றைய திருவிதாங்கூர் நாட்டைச்சேர்ந்த கன்னியாகுமரி,தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் குடியேறிய   கத்திக்காரர்,சவளக்காரர் போன்றோர் அவ்விடங்களில் பார்க்கவ குல மூப்பனார்  என்ற பட்டங்களோடும் வாழ்ந்து வருகின்றனர்.
திருப்பட்டூர்க் கல்வெட்டு.
நெற்குளம் என்ற ஊரில் பெரும் ஜமீனாக இருந்த சுருதிமான் சொர்ண வேந்தனான லங்கேசுவரன் என்பவர் தனது நிலங்களை  விற்பது சம்பந்தமான செய்தியை திருப்பட்டூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.மேலும் ஊட்டத்தூர் கல்வெட்டுகள் பெரும்பாலான சுருதிமான்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது.ஆனந்தவாடி செப்பேட்டு செய்திகளில் காணியாட்சி உள்ள மக்களில் அதிகம் பேர் பார்க்கவ குல மூப்பனார்கள் என்கிறது.
கத்திரியர்,கத்தியர் என்னும் கத்திக்காரர்களையும்,மேலும் சவளக்காரர் என்ற முன்னணிப் படை வீரர்களாக,தளபதிகளாகக் கொண்டு போர்க்குடியினராக மட்டுமே இருந்து வந்த சத்திரிய சமூகமான இவர்கள் எப்போதிலிருந்து நிலவுடைமை சமூகமாக மாறினார் என்பதைக் கீழ்க்காணும் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

 LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.


Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the  periods of the  RAJARAJA 3rd. 
These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and BUYING) by several suruthimans fellows in the Thiruchchirapalli district. 
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.
we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.

Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.

so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

பார்க்கவ குல மக்கள்.மலாடர்=மலையர்=சேதியர்=மழவர்.

பார்க்கவ குல மக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக பொதுவான அறியாமையால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் மழவர்,மறவர்,மலையர்,மலாடர்,சேதியர் என்ற சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக வேளாண்மைத் தொழிலில் இறங்கினர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வு .....


      LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.

Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to theperiods of the RAJARAJA 3rd.

These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and BUYING) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that thisperson was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

சேர வம்சத்தின் மலையர் மழவர் வம்சத்தைச் சேர்ந்த மக்களான இவர்கள்...

பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,
கிழார்(மூப்பனார்),வேளாளர் என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர்,பாளையத்தார் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மழவர்,மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள். சேதியர் என்றும் பொதுப் பெயரால் அழைக்கப்படுபவர்கள்.
எட்கர் தர்ஸ்டன் பார்க்கவர்களைப் பற்றிய குறிப்புகளில் வேட்டுவ மறவர்கள் என்கிறார்.இது மழவர்களை நேரடியாக சுட்டுகிறது.
.Tradition traces the descent of the three castes from a certain Deva Raja, a Chera king, who had
three wives, by each of whom he had a son, and these
were the ancestors of the three castes. There are other
stories, but all agree in ascribing the origin of the castes
to a single progenitor of the Chera dynasty.
 It seems
probable that they are descendants of the Vedar soldiers
of the Kongu country,
 who were induced to settle in the
eastern districts of the Chera kingdom.

மேலும் வன்னியரான சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும், மழவராயர் மரபையும் மலாடு நாடு (பார்க்கவ குலம்)மலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
சேதியன் எனில் வெட்டுபவன்,அழிப்பவன்=மறவன் எனப்பொருள் வரும்.
(சேதித்தல் என்பது வெட்டுதலை,அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.)

எடுத்துக்காட்டு..
தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7) 2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50) 3. "'அவர்களை சேதித்தனர்"" என்பது உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் சேதியர்களாக ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.
சேதியன் என்ற கத்திக்காரர்களே பார்க்கவ குலத்தில் சுருதிமான்  மூப்பனார் ஆவார். இவர்களே கத்திரியர் என்ற கத்திக்காரர்கள். போர்க்கருவிகளின் பெயரினையே பட்டப்பெயராகக் கொண்டு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் எல்லாம் மலையமான் வழிவந்த சேதியர் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனாலும் தம் முன்னோர்கள் எல்லாம் கத்தி பிடித்து போர் செய்தவர்கள்,பாரி மன்னரின் பார்க்கவ குல வம்சம் என்று மட்டுமே இன்றைக்கும் மறவாமல் கூறுவார்கள்.

வாளும்,கத்தியும்,வேலும் கொண்டு போரின் போது முதல் வரிசையில் களம் இறங்குபவர்கள்.படைக்கு முன் வரிசைத் தலைவன் தளபதி என்ற பொருளில்
 HEAD MAN மூப்பனார் என்று இருந்து, மிகவும் பின்னாளில் விவசாயத்திற்கு திரும்பிய குழுக்களான சேதியர்கள் இவர்களே.(அநேகமாக ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் சத்திரியர் என வழங்கப்பட்டவர்களும் இவர்களே)

இன்றைக்கும் பாரியின் வம்சம் நாங்கள் என்று மட்டுமே மார் தட்டிச் சொல்லத் தெரிந்த மழவர்,சேதியர் இனமான பார்க்கவ குலத்தோரே நீங்கள் வேள் பாரி மட்டுமல்லாது மலையமான்கள்,அதியமான்கள் என்ற வேளிர்களின் குலத்தில் வந்தவர்கள்.
நீங்கள் அனைவரும் மழவர்,மலாடர்,மலையர்,சேதியர் என்றழைக்கப்படும் மறக்குலத்தை சேர்ந்தவர்கள்.
கத்திரியர்,கத்திக்காரர் என்று வாள் பிடித்து போரிட்ட சத்திரிய குல சேதியர் சமூகம் நீங்கள்.
பார்க்கவ குலத்தோரே இவ்வாறு ஆண்ட வரலாறு கூறுவது உங்களை சிறப்பாக உயர்த்திக் காட்ட வேண்டி மட்டுமல்ல.

ஈகையும்,வீரமும் சமதர்ம நோக்கமும்,நல்லொழுக்கங்களும் நமது வேளிர் குலச் சிறப்பு என்பதையும் அதனை எல்லாம் பின்பற்ற வேண்டிய கடமையையும் உங்களுக்கு உண்டென்பதை உணர்ந்த வேண்டியும் தான் நம்மவர்களாலேயே தற்பெருமை கூடாது என்று கருதி சொல்லாமல் விடப்பட்ட நம் குல வரலாற்று உண்மைகள் இன்றைக்கு பொதுவில் உங்களுக்காக வெளிப்படுத்தப்படுகின்றது.

பார்க்கவ கோத்திரத்து வேளிர்கள்.

வேளிர் யார் என்ற கேள்விக்கு விடையாக குறிஞ்சிக் கோமான் கபிலர் அவர்கள் இருங்கோவேள் என்ற வேளிர் குல அரசனை நோக்கி பாடிய பாடல் ஒன்று விடை கூறும்.பாடல் இது தான்...


நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன் படு மால் வரைக் கிழவ, வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங் குரைய நாடு கிழவோயே!



பாடலின் பொருளாக அறிஞர்கள் கூறுவது.
வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!
வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.
தடவு என்ற சொல்லுக்கு மேற்கூறியவாறும்,மண்பாண்டம்,மலை சூழ் இடம் என்றும் பலரும் பலவிதமாக பொருள் கூறுகின்றனர்.

ஆனால் பொதுவாக வேளிர்கள் தம்மை ஏதேனும் ஒரு ரிஷியின் கோத்திரம் என்றே கூறுவார்கள்.
உதாரணமாக மலையமான்கள் தம்மை பார்க்கவ கோத்திரமாகவும், பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாகவும் கூறிக்கொள்வர். தடவு என்பதை தடம் என்ற வழிகாட்டுதல் என்ற பொருள் கொள்தலே சரியான முறையாகும்.                                                      ஏனெனில் முனிவர்களின்  யாக நெருப்பிலிருந்து தங்களது குல முதல்வர்கள் தோன்றினர் என்று கூறும் கதைகள் நம்மிடம் காணப்படுகிறது. ஆனால் நெருப்பிலிருந்து மனிதன் தோன்ற இயலாது என்பதே யதார்த்தம்.அப்படியெனில் யாக  நெருப்பிலிருந்து தோன்றினர் என்பதை குரு குல போதனை அல்லது வழி காட்டுதல் படி வாழ்பவர்கள்.என்றே பொருள் கொள்ளவேண்டும். குல குருக்களின் போதனை வழி நடத்தலின் பேரிலேயே தேவர் அசுரர் போன்றோரும்,புராண மற்றும் வரலாற்று அரசர்களும் கூட நெறிப் படுத்தப்பட்டுள்ளனர். குல குரு என்பதையே முனிவன் என்றும் தடவு என்பதை கோத்திரம் என்ற வழிகாட்டும் நெறிமுறை என்றே பொருள் கொள்வது சரியானதாக இருக்கும்.
வேளிர்கள் என்போர் துவாரகையிலிருந்து                                                   கண்ணன் எனப்படும் யாதவ அரசரால் தென்னகம் நோக்கி அனுப்பப்படுகின்றனர். அது ஏதேனும் ஒரு போரின் நிமித்தமாகவோ,
எல்லைகளை விரிவு கொள்ளும் நோக்கத்தோடோ இருக்க வேண்டும். ஆய்வுகளின் படி தோராயமாக 3250 - 3,300 ஆண்டுகளுக்கு முன் துவாரகையில் இருந்து தென்னகம் நோக்கி வந்துள்ளனர்.
அவ்வாறு வந்த வேளிர்களின் வம்சத்தில் வந்தோர் தான் தற்போதுள்ள வேளிர் குடியினர். அதனால் தான் கோத்திரம் கூறும் மரபு வேளிர் குல சத்திரியர்கள் இடையே காணப்படுகிறது. சம்புவராயர் சம்பு கோத்திரம்.

பார்க்கவ குலத்தவர்கள் சத்திரியர்கள்.

வேளிர்களை வெள்ளாளர்களோடு தொடர்பு படுத்திக் கூறிக்கொள்வது தன் சார்புக் கொள்கை மட்டுமே. வேள் என்பவன் அரசன் அவர்களால் ஆளப்படுபவர் வெள்ளாளர்  இதுவே உண்மை.
வேளிர்களை கண்ணன் அனுப்பியதாக கூறுகின்றனரே அப்படியாயின் அவர்களுக்கும் வடக்கிலுள்ள யாதவ அரச குலத்திற்கும் இங்குள்ள வேளிர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டுமல்லவா.
இதோ தொடர்பு பற்றிய ஆதாரம்..
திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில் கல்வெட்டுகளில்

பார்க்கவ கோத்திரத்து யாதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான் என்ற மன்னன் பற்றிய குறிப்புகள் உள்ளன.

 யாதவ குலம் என்று நத்தமான்கள் கல்வெட்டு உள்ளது. சுருதிமான்கள் யது குலம் ஆகிய இருங்கோளர் என்றும் கூறியுள்ளார் கல்வெட்டுகளில் .
மலையமான் இனத்தின் உட்பிரிவான (சுருதிமான்) இருங்கோவேள் குலத்தவர்களை யது வம்ச கேது என்று கூறும் கல்வெட்டும் உள்ளது. பார்க்கவ குலத்தவர்கள் உண்மையில் யது குல க்ஷத்ரியர்கள் ஆன வேளிர் குலம் ஆவார்கள்.

கிளியூர் மலையமான்கள்

கிளியூர் மலையமான்கள் என்போர் மலையமான்களில் கிளியூர் என்ற பகுதியை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தவர்கள்.பார்க்கவ குலத்தில் உதித்த இவர்களை இவர்களால் ஆளப்பட்ட மக்களும் கூட அவர்கள் இனமாக உரிமை கோரும் அளவு வீரமும் ஈகையும் கொண்ட பெருமை உடையவர்கள்.


இவர்களில் முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்கவர்களாக

கிளியூர் மலையமான் பெரிய உடையானான ராசராச சேதிராயன்.
சதிரன் மலையனான ராஜேந்திர சோழ மலையமான்

சூரியன் சாவன சகாயனான மலைய குலராசன்
சூரியன் மறவனான மலையகுல ராசன்
சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்

ஆகியோர் இருந்துள்ளனர்.இவர்களில் சூரியன் எனத்தொடங்கும் மூவரும் உடன்பிறந்தோர்,ராஜேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய உறவு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்கள் குலோத்துங்கனது ஆட்சிக்காலத்தில் முற்பகுதியில் ஆண்டு வந்தவர்கள்.
பிற்பகுதியில்
கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான ராஜேந்திர சோழ சேதிராயன்  என்பவர் ஆண்டுள்ளார்,இவரே திருக்கோவில் சித்த லிங்க மடத்திலுள்ள சிவன் கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்தவர்.

சேதித் திருநாடர் சேவகன் என்பவன் மலையமான் மரபை சார்ந்த மன்னன்.
இவன் கிளியூர் திருக்கோவிலூர் ஆகிய நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆண்டு வந்தான்.இவனே கருநாடகரோடு போர் புரிந்து வெற்றி பெற்றவன் என்று விக்கிரம சோழனுலா நூல் கூறுகிறது.

விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் ராசேந்திர சோழ மலைய குலராஜன், விக்கிரம சோழ சேதிராயன் ஆகிய மலையமான் குல மன்னர்கள் ஆண்ட குறிப்பு தென்னாற்காடு மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டில் உள்ளது.

குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தியில்
பெருங்கற்பில் மலாடர் குலமணி விளக்கு முறுவல் தெரிவை முக்கோ கிளானடிகள் பற்றிய குறிப்பு வருகிறது.
அதே காலத்தில் திருக்கோவலூரை விக்கிரம சோழ கோவலராயன் என்ற மலாடர் குல மன்னன் ஒருவன் ஆண்டுள்ளான்.இவனது தாயார் வீரட்டானமுடையார் கோவிலில் மடைப்பள்ளி கட்டியதாக அவ்வூர் கல்வெட்டு கூறுகிறது.

கிளியூரான்
கிளியூர் நிலப்பரப்பை மற்றுமொரு மலையர் குல சிற்றரசன்
மலையமான் குலோத்துங்கச் சோழன் சேதிராயன் என்ற பெயரில் ஆண்டுள்ளான்.

மலையமான் பெரிய உடையான் 
 இரண்டாம் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில்
மலையமான் பெரிய உடையான் நீரேற்றான் என்றழைக்கப்பட்டராஜராஜ மலைய குலராசன் மலையமான் அத்திமல்லன் சொக்கப்பெருமான் ஆன ராசகம்பீர சேதிராயன் கலிய பெருமாள் பெரிய நாயனான சேதிராயன் என்பவர் கிளியூரை தலைநகராக கொண்டும்,
அரியபெருமாள் எனும் மற்றுமொரு மலையமான் இனத்து அரசன் திருக்கோவிலூரை தலைநகராக கொண்டும் ஆண்டுள்ளனர்.கி.பி.1058ல் திருமால் கோவில்கள் எடுப்பித்த பார்க்கவ குல மிலாடுடையான் நரசிங்கவர்மனுடைய பெயரன் தான் அரியபெருமாள்.

ஆகாரசூர மலையமான்(கி.பி.1163-1178) 
இரண்டாம் ராசாதிராச சோழன் ஆட்சிக்காலத்தில் மலையமான் நாட்டை திருக்கோவிலூர்,கிளியூர்,ஆடையூர் ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு மலாடர் குல மன்னர்கள்
ராசராச மலையராயன் ஆகிய அருளானப்பெருமான் ராசராச சேதிராயன்
ராசராச கோவலராயன் 
கிளியூர் ராச கம்பீர சேதிநாடன்
நீறணிந்தாளாகிய சேதிராயன்
திருவரங்கமுடையான் ராசாதிராச மலையரையன்
ஆகாரசூர மலையமான்   ஆகிய மன்னர்கள் ஆண்டு வந்தனர்.இவர்கள் கீழூர் ,திருக்கோவிலூர்,சித்தலிங்க மடம் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களுக்கு நிவந்தம் அளித்துள்ளனர்.

மலையமான் இறையூரான்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்
கிளியூர் மலையமான் இறையூரன் ராசராச சேதிராயன் என்னும் மலையர் குல அரசன் சேதிநாட்டை ஆண்டுள்ளான்,இவனே மூன்றாம் குலோத்துங்கனுடைய படைத்தளபதி என்று கல்வெட்டு கூறுகிறது.
கி.பி   1200 ல் திரு அறையாய நல்லூர் கோவிலில் மூன்று நந்தா விளக்குகளை எரிக்க நிலங்களை இறையிலியாக வழங்கியுள்ளான்.
பெரியுடையான் ராசராச கோவலராயன் இவனது மகனாவார்.

மலையன் நரசிம்மவர்மன் ஆகிய கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான் என்ற நரசிம்மவர்மன் என்னும் மலாடர் குல அரசன் இரண்டாம் ராசராசன்,மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோரின் படைத் தலைவனாக இருந்துள்ளார்.

இலங்கையின் சரித்திரம் கூறும் மகாவம்சம் என்ற நூலில்திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பி என்னும் மலையர்குல அரசன் பல்லவராயனோடு பாண்டிநாடு சென்று அந்நாட்டு படையுடன் போர் செய்து வெற்றி வாகை சூடினான் என்று உள்ளது.

உடையார் பட்டமும் உடையார் பட்டம் பயன்படுத்தும் ஜாதிகளும்.

நமை ஆளும் ஈசனும்,அரசனும் உடையார் என்று உயர்வாக அழைக்கப்பட்டார்கள். உடையார் என்பது கடவுள் அரசன் இருவரையும் குறிக்கும் சிறப்பு கொண்ட ஒரு பட்டம் ஆகும். பண்டைய காலத்தில் பெருமளவு நிலத்தை உடைமை கொண்டோருக்கு ஆளும் உரிமை கொண்டோருக்கு அதாவது வேளிர்,அரசன் ஆகியோருக்கு உடையார் என்ற பட்டம் பொதுவாக காணப்பட்டது. உடையார்த் தேவர் என்பது(அகமுடையார் அல்ல) சிவகங்கை நாட்டின் அரச வம்சமான மறவர் குல அரச வாரிசுகளின் பட்டம். இவர்களின் உடையார் பட்டத்தை அவர்களின் மேல் உள்ள பற்றுதலால் சிவகங்கை,ராமநாதபுரத்தில் வாழும் பொதுமக்களில் சிலரும் கூட பிற்காலத்தில் உடையார் கோனார்; உடையார் நாடார்,உடையார் வேளார்,உடையார் அம்பலம்,உடையார் சேர்வை என்று தனது ஜாதிப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டனர்.


பண்டைக்காலத்தில் இருந்தே உடையார் என்ற வம்சப்பெயர் மலையமான் தெய்வீக ராஜனின் பார்க்கவ குல வம்சத்தைச் சேர்ந்த மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்ற மூவருக்கும் பொதுவில் வழங்கியது.
 ஆனால் முடியாட்சி காலத்திற்கு பிறகு உடையார் என்ற பட்டத்தை பல இனத்தவரும் குல உயர்வு வேண்டி,தாமும் நில உடமையாளர்கள் அதனால் தாமும் உடையார் என்ற பொருளிலும்,நிலத்தோடு,மண்ணோடு தொடர்புடைய தொழில் கொண்டோரும் கூட உடையார் என்று பட்டம் சூட்டிக்கொண்டனர். வெள்ளாளர்களில் நில உடைமையாளர் ஆன முதலியார் பிள்ளைமார் போன்றோரும் உடையார் என்று பட்டம் சூட்டிக் கொண்டனர்.

குலாளர்கள் (வென்று மண் கொண்ட உடையார்என்று அழைக்கப்படும் குயவர் பெருமக்களும் தம்மை மண்ணுடையார்  என்று அழைத்துக்கொள்வர். வேட்கோவர்,வேளார் என்ற பெயர்களில் உள்ள வேள் என்பது மண்ணைக் குறிக்கும். மண் கொண்டு தொழில் செய்யும் உரிமை கொண்டோர் என்ற பதத்தில்  மண்ணுடையார் என்றும் கூட குயவர்கள் தம்மை அழைத்துக் கொண்டனர்.(அதனாலேயே உடையார் என்று ஜாதிப் பட்டம் யாரும் பொதுவாகக் கூறினால் குயவரா நீங்கள் என்று தான் முதலில் கேட்பார்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில்)

மேலும் மைசூர் அரசர்களான உடையார்கள்,உடையா பட்டம் கொண்ட லிங்காயத்,படுகர்கள்,வெள்ளாள உடையார்கள் (முதலியார்,பிள்ளைமார்) எல்லாம் வேறு வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். 

இன்னும் உடையார் என்ற பட்டம் வேறு பல இன மொழி பேசும் மக்களிடம் காணப்பட்டாலும் மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் வம்சத்தில் வந்த பார்க்கவ குல உடையார்கள் மட்டுமே மலையமான் நத்தமான் சுருதிமான் என்ற தனித் தனி வம்சப்பெயர் உடையவர்கள். சுருதிமான் மூப்பனார்களும் உடையார் என்றே பட்டம் கொண்டு இருந்துள்ளனர். ஆகவே தான் பொதுவாக மலையமான்,நத்தமான்,சுருதிமான் மூவரையுமே பொதுவாகவே உடையார் சாதியினர் என்பார்கள். பின்னாளில் காணியாட்சி முறையில் சிறந்து விளங்கியமையால் தஞ்சை,திருச்சி போன்ற பகுதியில் வழக்கில் உள்ள நிலக்கிழார்களின் ஜமீன்தார் முறைப்படியும்,HEAD MAN குல முதல்வர் என்ற பொருளிலும் மூப்பனார் என்ற பொதுவான பட்டம் கொண்டு சுருதிமான்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் தம்மை பார்க்கவ குல மூப்பனார் என்றோ,சுருதிமான் மூப்பனார் என்றோ சொல்ல வேண்டும். 

அதே போல பார்க்கவர்களில் நயினார், மலையமான் உடையார்,
நத்தமான் உடையார் என்றுதெளிவாகக் கூற வேண்டும். இதுவே பிற்காலத்தில் நம் சந்ததியினருக்கு இத்தனை உடையார்களில் நாம் எந்த உடையார் என்ற குழப்பம் எல்லாம் நேராமல் காக்கும்.

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.





சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது. குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது. பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி ஏழு முதல் எட்டாம் நூற்றாண்டுகளுக்குள் உள்ளது.

மேலும் இம்மூவரும் சகோதரர் என்று கூறப்பட்டுள்ளது. சகோதரர் என்று கூறும் போது மூவரும் ஒரே  வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் என்பதே உண்மையாகும். தெய்வீக ராஜனின் காலமும் இவர்களின் காலமும் வேறுபட்டாலும் தெய்வீகன் மலையமான் நரசிம்ம உடையானின் பார்க்கவ வம்சத்தின் வம்சாவழியில் வந்தவர்கள் தான் இவர்கள் மூவரும் என்ற தகவலை பனிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தெய்வீக ராஜன் பற்றிய செப்பேடு உறுதி செய்கிறது.


மேலும் நாயன்மார் இருவர் சேதிநாட்டில் ஒரே கால கட்டத்தில் ஆண்டதனாலும் சைவ சமயம் சிறந்து விளங்கிய கால கட்டத்தில் மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர் இருவரது பெருமையும் கொண்டாடப்பட்டது. ஆகவே சுருதிமான் குலசேகரர் பற்றிய தகவல்கள் ஓரளவே காணப்படும்.

அதில் அவர் சுருதிகள்(வேதங்கள்)பல கற்றவர். பாண்டியன் மகளை மணந்தவர்.  எல்லா வித்தைகளிலும் சிறந்தவர். பக்தியின் பாற்பட்டு நாட்டைத் துறந்து தேசாந்திரம் சென்றவர். என்பன போன்ற குறிப்புகள் காணப்படும்.

சுருதி என்பது வேதத்தை மட்டுமல்லாது ஆதி,பண்டைய,மூலம் என்ற பொருளும் உடையது.ஆகவே தான் சுருதிமான்கள் இக்குலத்தின் ஆதி மூலமான முதன்மையானவர் என்ற பொருளுடைய மூப்பனார் என்ற பட்டம் உடையோர் ஆனார்கள்.

மெய்ப்பொருளார் மற்றும் நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்புகள் பெரிய புராணம் வாயிலாக கிடைத்துள்ள நமக்கு குலசேகரர் பற்றி ஏதும் குறிப்புகள் இல்லாமல் போகவில்லை. சைவ மதப்பற்றால் மறைக்கப்பட்டுள்ளது. சைவம் ஓங்கியிருந்த அக்காலத்தில் வைணவ ஆழ்வாரான குலசேகரர் அடையாளம் காட்டப்படாமல் பொதுவாக சுருதிமான் குலசேகரர் என குறிக்கப்பட்டுள்ளார்.

கருவூர் கொல்லி மாநகரை தலைநகராக கொண்ட சேர மன்னனான குலசேகரர் கொங்கர் கோமான் என்று அழைக்கப்பட்டார். பார்க்கவ குலத்தவர்களும் கொங்கராயர் என்ற பட்டம் உடையவர்கள்.

சுருதிமான் என்பதன் முழுமையான அர்த்தம் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்பதே. சுருதிகளில்,போர் பயிற்சிகளில் தேர்ந்தவர்.

அதே போல் குலசேகர ஆழ்வாரும் சுருதிகளில் தேர்ந்தவராயும்,போர் செய்வதில் வல்லமை உடையவராயும் வரலாற்றில் காணப்படுகிறார்.

ராம காதையால் ஈர்க்கப்பட்டு திருவாய் திருமொழி என்ற பாடல்களை ஆழ்வார் பாடியுள்ளார். இவரின் வீரத்தை கண்டு பாண்டியன் தன் மகளை இவர்க்கு மணம் செய்வித்ததாக அறிய முடிகிறது. ஆழ்வாரது பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படும்.

சுருதிமான் குலசேகரரும் பாண்டியன் மகளை மணந்ததாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக குலசேகர ஆழ்வார் பக்தி காரணமாக

"ஆனான செல்வத்துஅரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று கூறி நாடு துறந்து துறவு பூண்டு திருவரங்கம் சென்றார். சுருதிமான் குலசேகரரும் பக்தி காரணமாக நாடு துறந்து துறவறம் பூண்டு திருக்கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.


அநேக ஒற்றுமை உள்ள இருவரது வரலாறும் இருவரும் ஒருவரே என்பதை தெளிவாக உணர்த்தும்.


பார்க்கவ வம்சத்தில் சைவ மதம் வலிமை பெற்று விளங்கிய காரணத்தாலும் அனைவரும் தீவிர சைவர்கள் ஆக இருந்ததாலும் சுருதிமான் குலசேகரனே குலசேகர ஆழ்வார் என்ற தகவல் வெளிப்படுத்தப்படவில்லை.           தலையாய காரணமாக வன்னியப் பட்டம் கொண்ட காரணத்தால் அறியாமையாக வன்னிய இனக்குழுவில் இணைக்கப்பட்ட நம் மக்களின் சிலரது உரிமையைக் கொண்டே சேரமான் குலசேகரரை அவ்வினத்தோர் உரிமைகொள்ளும் படி ஆனது. அன்றைக்கு சூழலில் அந்நியரின் அரசியல் வழி நடத்தலால் பார்க்கவர்களும் குலப்பெருமை கோராது அறியாமையாக வாளாதிருந்திருக்கின்றனர்.
குலசேகரர் என்றால் குலத்தின் சிகரமானவர் என்று பொருள் உண்டு. குலத்தின் சிகரமான ஆழ்வாரை,நம் மலையமான்கள் அருமை உணராது உரிமைகோராது இருந்து கொண்டனர். அதே வேளையில் (வன்னியர் பட்டத்தால்)வேற்று இனக்குழுவில் அறியாமையால் இணைந்த நம் உடையார் இன மக்களின் மூலமாக குலசேகர ஆழ்வாரை குல உயர்வு செய்தே ஆக வேண்டிய நிலையில் அன்றைக்கு இருந்தோர் சத்திரிய பெருமை வேண்டி தமது இனம் என்று உரிமை கூறிக் கொண்டனர். ஏனெனில் நம் பார்க்கவ குல அரசர்களை உரிமை கோரினால் மட்டுமே சத்திரியர் என்று பட்டம் பெற முடியும்.



மனிதரில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எங்கும் இல்லை. சாதி இரண்டொழிய வேறில்லை.

இட்டார் பெரியார் ,இடாதோர் இழி குலத்தார்.

சேரமான் பெருமாள் அனைவருக்கும் பொதுவானவரே.

ஆனால் சுருதிமான் குலசேகர ஆழ்வாரே நம் குல முதல்வர் என்பதையும் மலையமானின் பார்க்கவ குல மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.



இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் 
எங்கள் குலசே கரனென்றே கூறு.

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 

வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசேகரன்முடி வேந்தர் சிகாமணியே.

பார்க்கவ குலத்தின் பட்டங்களும் விருதுகளும்.

தெய்வீகன் மலையமான் நரசிங்க உடையாரின் வம்சாவழியினரான சுருதிமான்,மலையமான்,நத்தமான் மரபினர் பார்க்கவ குலம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் மரபுவழி வந்தவர்களே சேதிநாடு,மலையமாநாடு,நடுநாடு,நத்த நாடு,மாவலி நாடு,பெண்ணை நாடு,கோவல நாடு,தெய்வீக நாடு,முள்ளூர் நாடு  என்றெல்லாம் அழைக்கப்படும் நடுநாட்டுப் பகுதிக்கு அரசனாகவும், வேளிராகவும்,போர் வீரராகவும்,சோழனின் போர்ப்படைத் தளபதியாகவும்,பெரிய அதிகார பதவிகளிலும்,கருவூலக் காவல் அதிகாரியாகவும் இருந்தமையால் உடையார் குலத்தவர்க்கு அநேகமான பட்டங்களும்,விருதுப் பெயர்களும் உண்டு.

 

பட்டங்கள்

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
உடையார் 
நயினார் 
மூப்பனார்

இவை ஆறும் தற்போது பார்க்கவ குலத்திற்கு வழங்கி வரும் பொதுவான பட்டங்கள்.

..............................................................................................................

விருதுகளும் பட்டங்களும்.

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
வேளிர் 
வேள்
சேதிராயர்
மலாடுடையார்
மிலாடுடையார்
முனையரையர்
மலையரையர்(மலையர்களை ஆண்டவன்)
கோவலரையர்(கோவலர்களை ஆண்டவன்)
கோவலன்
கொங்குராயர்(கொங்கர்களை ஆண்டவன்)
பண்டரையர் 
பண்டாரத்தார்(கருவூல காவல் அதிகாரி)
பண்டாரியார்
பாளையத்தார்
கொங்கராய பாளையத்தார்
நாட்டார்
பெரிய நாட்டார்
சீமை நாட்டார்
தேவன்
அரையத்தேவன்
மலையராயர்
மலையரசன்
மழவராயர்(மழவர்களை ஆண்டவன்)
மலாடர்
சேதியர்
சேதிபர்
சேதியர் கோன்.(சேதியர்களின் அரசன்)
மகத நாடாள்வார்
மகத நாடன்
சேதி நாடன்
நாடாள்வான்
கத்திக்காரர்
சவளக்காரர்
வன்னியர்
காவல்காரர்
வன்னிய நாயகன்
காடவராயர்
பல்லவராயர்
நான்முடியன்
நரசிங்க மைந்தன்
நந்திப் பொருப்பன்
பெண்ணை நாடன்
மாவலி நாடன் 
வில்லாளன்
பதினெண் புவியன்
கோவல் வேந்தன்
வலாரித்துறையன்
பெண்ணைத் துறைவன்
நத்த நாட்டேந்தல்
இறையாபுரியான்
இரண கேசரி 
வர்மன்
தொண்டைமான்
கச்சிராயர்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்(மலையர்களின் அரசன்)
அருணாட்டேந்தன்
மூப்பர்பிதா
வேதமுணர்ந்தோன்
வேனாட்டான்
கொங்கர் கோன்
கோவலூரான்
குடவல கோவல காவலன்
பெண்ணையம் படப்பை நாடு களவோன்.
மலைய நத்தன்
மலையமன்னன் (உடையார்,நயினார்)
நத்தமன்னன் (உடையார்)
சுருதிமன்னன் (உடையாரில் மூப்பனார்)
இருங்கோவேளர்(சுருதிமான்)
வாணராயர் 
வாணகோவரையர் 
வானாதிராயர்
இன்னும் அநேகம் பட்டங்களும் விருதுகளும் உண்டு.