பார்க்கவ குலத்தில் முதலியார், பிள்ளை அகமுடையார் பட்டங்கள்.

பார்க்கவ குலத்தில் முதலியார் என்ற பட்டம் கொண்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்றனர்.

சுருதிமான் படைமுதலி போன்ற கல்வெட்டுகள் படைக்கு தளபதியாக இருந்த நம்மவர்களுக்கு முதலியார் பட்டம் உண்டு என்பதை உறுதி செய்கிறது. 
பார்க்கவ குலம் பிள்ளை என்ற கௌரவ பட்டமாக பாண்டிச்சேரி பகுதிகளில் வாழும் பார்க்கவர்களுக்கு உண்டு. இவர்கள் அரசு ஆட்சி அதிகாரத்தில் மிகப்பெரிய அதிகார பதவிகளில் இருந்தவர்கள்.

அகமுடையார் என்ற பட்டம் நமக்கு நிறையவே இருந்திருக்கிறது. சுருதிமான் அகமுடையார் மலையமான் அகமுடையார். ஆதாரமே உண்டு. சங்க காலத்தில் தமிழ் நாட்டையே அரணாக நின்று தன் அகம் போல காத்தவர்கள் நம் மலையமான்கள் வம்சம் தான். அது போல வீரத்தினாலும் பிறப்பு உரிமையினாலும் அநேகமான நிலங்களின் உடைமை கொண்டவர்கள்.
நாட்டை பாதுகாப்பதினாலும் வீரத்தாலும் அகமுடையார் என்ற பட்டமும் (அகம்படியர் அல்ல) நமக்கு இருந்திருக்கிறது.

சுருதிமான் என்றால் என்ன பொருள்? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்றால் என்ன? சுருதிமான்கள் யார்?

சுருதிமான் என்ற சமஸ்கிருதப் பெயருக்கு சுத்தமான தமிழில் பண்புப்பெயராக வரும் பெயர் சான்றோன் என்பதாகும். 
சான்றோன் என்பதன் பொருள்:
அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன் என பொருள்படும். சுருதிமான் என்றாலும் இதே பொருள் தான். சான்றோன் என்பதற்கும் சுருதிமான் என்பதற்கும் மூப்பனார் என்றும் நேரடியாக பொருள் உண்டு. தமிழறிந்தோர் உணர்வார். 

சங்க இலக்கியத்தில் சான்றோன் என்ற சொல் பல இடங்களில் போர் வீரன் என்றே பொருள் வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சோழ படைகளில் பெரும் எண்ணிக்கையில் வீரர்களாக தளபதியாக இருந்தவர்கள் சுருதிமான்கள் தான். தளபதி=மூப்பனார்.

மேலும் சுருதிமான் =சான்றோன் = சூரியன் என்றும் பொருள் உண்டு.
சுருதிமான்கள் பார்க்கவ குலத்தில் சூரிய வம்சத்தவர்.

ஏன் நிச்சயமாக சொல்ல முடிகிறதென்றால், சுருதிமான்கள் காஷ்யப ரிஷியின் யாக நெருப்பில் இருந்து இரு அசுரர்களை அழிப்பதற்காக தோன்றியதாக ஒரு கல்வெட்டு உள்ளது. சூரியனின் தந்தை! காஷ்யப முனிவர் ஆவார். ஆகவே இது உறுதியான நிச்சயமான உண்மையாகும்.
சுருதிமான் என்றால் சான்றோன் என்றும் வீரன் என்றும் சூரிய வம்சத்தவன் என்றும் பொருள் வருகிறது.
இந்த உண்மையை மாற்றார் பலரும் புரிந்து கொண்டுள்ளனர். சுருதிமானை உரிமை கோரிப்பார்த்தனர் ஆனால் அது தான் முடியாதே.
ஏனென்றால் நம் மலையமான் நத்தமான் சுருதிமான் மூவரும் மலையமான் தெய்வீகராஜ வம்சம் உடையார் ஜாதி என்று செப்பேடு தெளிவாக கூறுகிறதே.
ஆகவே சுருதிமான்கள் அரச பரம்பரை என்பதற்கு ஆதாரம் வலுவாக இருப்பதாலும் சுருதிமான்களின் பெருமைகளைக் கொண்டு அரச பரம்பரை உரிமை கோரலாம் என்று நாடாழ்வான் என்ற சுருதிமானின் பட்டத்தைக் கொண்டு  திட்டமிட்டு காய் நகற்றிய ஒரு கூட்டத்திற்கு நம் இன வரலாற்றின் ஆதாரங்களின் தீர்க்கத்தின் காரணமாக அவர்களுக்கு இந்த வரலாற்று திருட்டில் ஏமாற்றம் மட்டும் தான் பலனாக கிடைக்கும் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தே விட்டது.

ஆகவே இனி வரும் நாட்களில் சுருதிமான்களின் வரலாறும் கல்வெட்டுகளும் சுத்தமாக மறைக்கப்பட்டு விடும். ஏன் இப்படி கூறுகின்றோம் என்றால் ஏற்கனவே சுருதிமான்களை பற்றி இருந்த சில கல்வெட்டு ஆவணங்கள் அப்படியே மறைக்கப்பட்டு விட்டன. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு தெரிந்த அதிர்ச்சியான உண்மை.

மலையமானின் பார்க்கவ குல சுருதிமான் வம்சத்தில் தேவர் பட்டம்


1. ஊற்றத்தூருடைய சுருதிமான் ஜனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.

2. சுருதிமான் சோரன் சொந்தன் ஆன இலங்கேஸ்வர தேவன். 

3. சுருதிமான் தேவன் பொழிமிகாமன். ,.

பார்க்கவ குல உடையார்கள் சோழர்களா?.

உடையார் ராஜராஜ சோழத்தேவர் என்ற பெயரில் உள்ள உடையார் என்ற பட்டம் ராஜராஜனின் தாய் வழிப்பட்டம் என்றும் வேறு எந்த சோழனுக்கும் உடையார் பட்டம் கிடையாது, என்று கூறுபவர்கள் உணரட்டும்..
உடையார் என்பது என்றைக்கும் எங்கள் இனத்தின்  பட்டமாகும். அதே போல் தேவர் என்ற பட்டம் இருந்ததற்கு ஆதாரம் எத்தனை வேண்டும்? அது அநேகம் உடையார்களுக்கு இருந்திருக்கிறது.
 
கண்டராதித்த சோழன் தொண்டை மானாற்று துஞ்சின உடையார்,ஆனை மேற்றுஞ்சின உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவியார் மலைநாட்டு
மழவராயர் மகள். உடையார் குலம் மழவராயர் குலம் தான்.

கரிகாலனும் மலையமான் மன்னவனும்.

அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது.
கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார்.
கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார். இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான்.
இங்கு மலையமான் பகைகொண்ட வேளிர்களில் சேர்க்கப்படவில்லை. கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது. அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார்.
டாக்டர்.ராசமாணிக்கனார் ஒரு கட்டுரையில் திருமுனைப்பாடி நரசிங்க முனையரையர் என்ற மலையமான் தான் சுந்தர சோழனை வளர்த்து பாதுகாத்தும் வந்துள்ளார்,என்று கூறியுள்ளார். ஏன் சோழர்கள் மீது மலையமான்களுக்கு இவ்வளவு அக்கறை?காரணம் மிகவும் வலுவானதே.

சோழனின் கிளைக்குடி என்று கூறப்படும் குடிகளில் பாதி மலையமான்களின் குடி பட்டங்களே, அவையாவன மலையமான்,சேதிராயர்,கொங்குராயர்,முனையரையர்,மழவரையர் ஆகும்.
சேதிராயர் என்பதை மட்டுமே சூரிய குலத்தின் கிளைக்குடி என்றே கூறியுள்ளனர்.
உண்மை இவ்வாறு இருக்க சோழரின் சொந்தமென உரிமை கொள்ளும் முழு தகுதியும் பார்க்கவ குலத்திற்கு உள்ளது எனவும் சோழர்களுக்கு ராஜராஜனுக்கும் முன்பிருந்தே உடையார் பட்டமுள்ளதையும் சுட்டிக் காட்டியாயிற்று.
இவ்வளவு ஏன் சோழர்களின் ஊர் பெயர் உடையார் குடி.
உடையாளூர்,உடையார்கள் இன்றைக்கும் அதிகமாக வசிக்கும் ஊர் இங்குதான் ராஜராஜனின் சமாதியும் உண்டு. ராஜராஜனுக்கு உடையார் பட்டமும் உண்டு.
முள்ளூர் அரசனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் தனது கோட்டை வாயிலில் புலியின் சின்னத்தைப் பதித்திருந்தான் என புறநானூற்றில் 174 வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிக் கொடி யாருடையது? அதை மலையமான் வைத்திருந்தான் என்றால் என்ன அர்த்தம் இருவரும் ஒரே குலம் என்று தானே தெளிவாகிறது.

உடையார் பட்டம் உள்ளோர் எல்லாம் உடையார் அல்ல.

ஆதியிலிருந்தே பார்க்கவ குலம் பெருமை வாய்ந்த சமூகமாக இருந்துள்ளதால் இந்த உடையார்,நயினார்,மூப்பனார் என்ற பட்டங்களை பிற சமூகங்களும் குலப்பெருமை வேண்டி,குறிப்பாக வன்னியர்கள், பிள்ளைமார்,முதலிமார் போன்ற வேளாளர்கள்,குயவர்கள்,முத்துராஜாக்கள்,கவுண்டர்கள் போன்றோர் சூட்டிக்கொண்டு அவரவர் ஜாதிப் பழக்கங்களையே கையாண்டுள்ளனர் .என்றொரு குறிப்பும் கிடைக்கிறது.

உடையார் என்ற பட்டம் வேளிர் வம்சத்தையே நேரடியாக சுட்டும். ஆதாரப்பூர்வமாக குறைந்த பட்சம் இரண்டாயிரம் வருடமாக சுத்தத் தமிழ் ஜாதி உடையான்கள் பார்க்கவ குலம் மட்டுமே.
சோழர்களோடு தொடர்புடைய மிக நெருங்கிய ஆதாரங்கள் எங்களிடம் இன்னும் கூட நிறையவே உண்டு.
மேலும் ராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி எங்கள் பார்க்கவ வம்சத்து மலையமானின் மகள் என்பது நிரூபணமான வரலாற்று ஆதாரங்கள் கொண்டது.
எங்கள் ரத்தமான உடையார் ராஜராஜனின் வீரத்தை ஒத்த, பெருமையை நிகர்த்த இந்திய அரசர்கள் அவனுக்கு முன்னரும், பின்னரும் யாருமில்லை என்ற பெருமை போதும்.
ராஜராஜனைப் பெற்றெடுத்த தாய் வம்சமும் நாங்கள் தான் என்ற பெருமையே போதும்.
மேலும் சோழர்கள் வாழ்ந்த, ஆண்ட பகுதியில் பெரும்பான்மையினர் உடையார்களே என்பதும் அங்குள்ள நிலங்களின் பெரும்பான்மை உரிமையாளர்கள் பிரபுக்கள் போன்றவர்களும் எப்போதும் உடையார்களே தான். டெல்டா பகுதியில் இருந்து பெருமளவு உடையார்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சூழ்நிலையில் அங்கிருந்து வெளியேறியும் இன்றைக்கும் உடையார்களே அங்கு பெரும்பான்மை.
  சோழர்கள் (நத்தமான்) உடையார்கள் தான் என்பதற்கு ஆதாரங்கள் இப்போது மறைக்கப்பட்டு இருக்கின்றன.  அவை விரைவில் வெளிப்படுத்தப்படும்.

சாளுக்ய அரசன் சத்யாசிரயனுடைய பட்டத்து யானையைக் கொன்ற சத்திரியன் சுருதிமான் நக்கன் சந்திரன்.

கிபி 1015 ம் வருடம் முதலாம் ராஜேந்திர சோழனுடைய யானைப்படைத் தளபதியாக திகழ்ந்த மாவீரன் சத்ரிய குல சிங்கம் சுருதிமான் நக்கன் சந்திரன் கடக்கம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பட்டத்து யானையைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்தான். இத் தளபதியின் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்ததாக கல்வெட்டு காணப்படுகிறது.

சுருதிமான்கள் அனைவருமே சிறந்த போர்வீரர்களாக அதிலும் தளபதியாக திகழ்ந்திருக்கின்றனர்.
சுருதிமானின் சில பட்டங்கள் மட்டும்
உடையான் ,அரையன்,பேரரையன், விழுப்பரையன், வானராயர், இருங்கோளன், சுருதிமான் மறவன் கண்டன்(சுத்த வீரன்), நிஷாத ராஜன், படைமுதலி, தெரிந்த வில்லிகள், சுருதிமான் வன்னிய நாயன், நாயன். ராஜமல்லன்,முத்தரையன், சுருதிமான் ஊரன் நம்பி(கத்திக்காரன்), மழவன், சுருதிமான் நாட்டார், நாடாள்வான் என்று இது போன்று இன்னும் அநேகம் பட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் பட்டங்களே இது போருக்கு சென்றவர் யாருக்கும் கிடைக்கலாம்.
ஆனால் இதில் அரசகுலவன் (பார்க்கவ குலம்,யது குலம்)என்று காணப்படுகிறதே இது தான் சத்திரியன் என்ற இனத்தைக் குறிப்பது. போருக்கு எல்லோரும் சென்றிருப்பதாக கூறுவார்கள். ஆனால் அவர் அனைவருக்கும் இம்மாதிரி அரசகுலத்தவர்(சத்திரியன்) என்று கல்வெட்டு காணப்படாது உறுதியாக. இது அரச வம்சத்தவர்க்கு மட்டுமே உரியது.

கிபி 1218 ம் வருடத்திய கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தியில் வேத காலத்தில் காஷ்யப ரிஷி இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக செய்த வேள்வியின் போது அந்த அக்னியில் இருந்து சுருதிமான்களைப் படைத்தார் என்று புராணக் கதை ஒன்று காணப்படுகிறது. நம் குல முதல்வன் தெய்வீக ராஜனே இவ்விதம் பார்க்கவ முனிவரின் யாகத்தில் தோன்றியவர் தானே.

மேலும் முக்கியமாக பார்க்கவ குலத்தவன் என்றும் யது குலம் என்றும் அரசகுலத்தவன் என்றும் உடையான் என்றும் மலையமான் நத்தமான் சுருதிமான் ஆகிய இம் மூவருக்குமே பொது ஒற்றுமை கொண்ட கல்வெட்டுகள் செப்பேடு ஆதாரங்கள் காணப்படுகிறது. ஆகவே தான் நாம் பார்க்கவ குல உடையார்கள் வேற்றுமைக்கு நமக்குள் வழியே இல்லை. வீரத்திற்கும் பாரம்பரியப்பெருமைக்கும் பண்பிற்கும் நமக்கு குறை ஒன்றுமில்லை.

பார்க்கவ குல உடையார் சரராமன் சடையன் சேதிராயன் என்ற சடையப்ப வள்ளல் .

சோழமண்டல சதகம் கூறும் உடையார் குலமும் சேதிராயர் இனமும்.   ...................................................................................................................................................................
உடையார் குலத்தில் பலவகையும்
உயர்வே ளாளர் பலவகையும்
குடையார் குலத்தில் பலவகையும்
கோனார் குலத்தில் பலவகையும்
அடைய வாயில் உடையாராய்&
அளகே சனைப்போல் அருங்கடலின்
மடையார் செல்வம் பெரிதாக
வளம்சேர் சோழ மண்டலமே 30
உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகிய பல குடியில் பல வள்ளல்கள் குபேரனைப் போல் பெரும் செல்வம் பெற்றுச் சோழநாட்டில் வாழ்ந்தனர்.

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்
உடையான் சரராமன் ஊர்

என்றார் கம்பர். சரராமன் - சடையப்ப வள்ளல் - உடையார் - பார்க்கவ குலத்தினர். சுருதிமானும், மலையமானும் அவருடன் சேர்ந்தவர் ஆவர்.
.................................................................................................................
வள்ளல் குலத்தோராக கம்பன் கூறும் இனத்தவர்கள்:

உடையார் குலத்தில் பலவகையும் அதாவது உடையார் என்றாலே பார்க்கவ குலம்(நத்தமான்) என்றே பொருள் கூறுகிறார் ஆசிரியர்.

சுருதிமானும் மலையமானும் இதே பார்க்கவ குலத்தையே சார்ந்தவர்கள் என்றும் இதையே உடையார் குலத்தில் பலவகையும் என்று அழகாக தெளிவுபடுத்துகிறார் உரையாசிரியர். நத்தமான்,மலையமான்,சுருதிமான் மூவருக்கும் பார்க்கவ கோத்திரம் என்ற கல்வெட்டு,செப்பேடு ஆதாரம் இருப்பதும் இதையே தெளிவாக உறுதி செய்கிறது.

செல்வந்தராய் இருந்து வாரி வழங்கும் வள்ளல் குலத்தினர் என்று கம்பர் கூறும் குலங்களாவது நம் பார்க்கவ குல உடையார் குலம் ஒன்றும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உயர் வேளாளர் அதாவது உழுதுண்ணும் வெள்ளாளர் அல்லாது உழுவித்துண்ணும் உயர் குடி வேளாளர் இனத்தவரையும் (சோழிய வேளாளர்),
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
குடையார் குலத்தில் பலவகையும் இவர்கள் திரைகடலோடி திரவியம் தேடிய வணிக குலத்தவர் ஆகிய பண்பிற் சிறந்த சிவ நேசச் செல்வர்கள் ஆகிய நகரத்தார் என்ற செட்டியார் இனத்தவர்களையும்,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கோனார் குலத்தில் பலவகையும், அதாவது ஆநிரைச் செல்வங்கள் அநேகம் கொண்ட செல்வக் குடியினரான கோனார் குலத்தில் உள்ளவர்களையும் கூறுகிறார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆக இந்த உடையார், வேளாளர், குடையார், கோனார் ஆகியோர் குபேரனைப் போல செல்வம் கொண்டவர்கள் என்றும் இவர்களில் பலர் வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துள்ளார்கள் சோழ தேசத்தில் என்கிறார்.

சடையப்ப வள்ளல் இவர்களில் நம் பார்க்கவ குல உடையார்
இனத்தவர் ஆகவே அவரை உடையான் சரராமன் என்று கம்பர் கூறுகிறார்.

மேலும்
குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூறவிணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனுமணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே சோழமண்டல சதகம்

நம் உடையார் இனத்தில் பிற்கால மலையமான்கள் சேதிராயர் பட்டம் கொண்டு ஆண்டுள்ளனர். அதையே இங்கு உடையான் சடையப்ப வள்ளலுக்கு உள்ள சேதிராயன் பட்டம் உறுதி செய்கிறது. ஆக என்றைக்கும் சிறந்த புகழ் வாய்ந்த வள்ளல் குலமும் வேளிர் குலமும் உடையார் குலமாகிய நம் பார்க்கவ குலமே ஆகும்.
எளியோர்க்கு ஈவதே எம் பிறவிக் கடன் எனக் கொள்ளுங்கள் வள்ளல் குலமாகிய பார்க்கவ குலத்தோரே. அதுவே நம் குல தர்மம் ஆகும்.

எவன் இந்த உடையானின் உடைவாள்?

உடையானின் உடைவாள் என்ற பெயரில் கள்ளர் மறவரைப் பற்றி தாறுமாறாக ஒரு நபர் எழுதி வருகிறார்.

அவர் நமது உடையார் இனத்தவர் கிடையாது வேற்று இனத்தவர் என்பது விசாரித்து அறிந்த வகையில் நிச்சயமான உண்மை.

ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் உடையாருக்கும் முக்குலத்தோருக்கும் இடையே பகை உண்டாக்க வேண்டும் என்ற தீய நோக்கம் ஒன்றே குறிக்கோள் என்பதை உணர்ந்து கொண்டோம்.

இது விஷயங்கள் சகோதரர் முக்குலத்துப் புலி வரலாற்று ஆசிரியர்  அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
நண்பர்களே சகோதரர்களே நம் இரு இனத்திற்குள்ளும் உள்ள நட்பும் நேசமும் வரலாற்று ரீதியான தொடர்பு உடையது ஆக எந்த ஒரு காரணத்திற்காகவும் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வேண்டாம்.
(அரசியல் சார்பால் உள்ள கருத்து வேறுபாடு எல்லா இனத்திற்குள்ளும் அதன் உட்பிரிவுகளுக்குள்ளும் எப்போதும் உள்ளது. அது இங்கு சம்பந்தமில்லாத ஒன்று)

ஆகவே முக்குலத்து சொந்தங்கள் மற்றும் பார்க்கவ குல சொந்தங்கள் ஆகியோர் இதை நம் இருவரையுமே பொது எதிரியாக கருதும் கொடிய எதிரியின் செயல் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் நமக்குள் மனக்கசப்பை உண்டாக்கும் தேவையற்ற வீண் வாக்கு வாதங்கள் கருத்து மாறுபாடுகள் வேண்டாம் என்று  கேட்டுக் கொள்கிறோம்.